ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
பிரப்பன்வலசை பகுதியில் அரசுப் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. பயணி ஒருவர் வாந்தி எடுப்பதற்காக கீழே இறங்கியதால், பேருந்து சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அப்போது ராமேஸ்வரம் நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்த சொகுசு கார், கட்டுப்பாட்டை இழந்து நின்றுகொண்டிருந்த பேருந்து மீது மோதியது.
இதில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ராஜேஷ், செந்தில் மனோகரன், பிரணவிகா, தர்ஷிலாராணி, அங்காள ஈஸ்வரி உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.