நாட்டில் உள்ள உயர்நீதிமன்றங்களில் 62 ஆயிரம் வழக்குகள் இன்றளவும் நிலுவையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், உயர்நீதிமன்றங்களில் கடந்த 1954-ம் ஆண்டு முதல் 1955-ம் ஆண்டு வரையில் 13 வழக்குகள் மட்டுமே நிலுவையில் இருந்ததாகவும், தற்போது சென்னை உயர்நீதிமன்றம், கொல்கத்தா நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் கடந்த 30 ஆண்டுகளாக 62 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.