திருவள்ளூர் மாவட்டம், ஆரணியில் நடைபெற்ற சம்பங்கி பிச்சாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆரணியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சம்பங்கி பிச்சாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா யாக கலச பூஜைகளுடன் தொடங்கியது. மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட கலச நீரானது ராஜகோபுரத்தின் மேல் ஊற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து காலத்தீஸ்வரர், வள்ளி முருகன், அண்ணாமலையார், கைலாசநாதர் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பெரியபாளையம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.