தமிழக மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தத் தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காணும் பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது என தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்கு கடிதம் அனுப்புவதுடன் கடமை முடிந்துவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் நினைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து மீனவர்கள் சிக்கலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தீர்வுகாண வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.