சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாஜக எம்.பி.யும் நடிகையுமான ஹேமமாலினி நளினமாக நடனமாடியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
ராய்கரில் சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேவ் சாய் தலைமையில் 39-ஆவது சக்ரதார் சமராஹ் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நடிகை ஹேமமாலினி குழுவினர் பரதநாட்டியம் ஆடினர். அப்போது ஹேமமாலினி தனது முகபாவனையில் நவரசங்களையும் கொண்டு வந்தது அனைவரையும் வெகுவாக ஈர்த்தது.