மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஸ்ரீமந்த் தக்துசேத் ஹல்வாய் விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவில் 42 ஆயிரம் பெண்கள் கலந்துகொண்டு கணபதி ஆரத்தி வழிபாட்டில் ஈடுபட்டனர். ஏராளமான பெண்கள் திரண்டு வழிபாடு நடத்தியது காண்போரை பக்தி பரவசமடைய செய்தது.
இந்த கோயிலில் உள்ள விநாயகர் சிலை 2.2 மீட்டர் உயரமும் 1 மீட்டர் அகலமும் கொண்டது. இது கிட்டத்தட்ட 40 கிலோ தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.