பக்ரீத், ரம்ஜான், ஈஸ்டர் என அனைத்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என தமிழக பாஜக மாநில செலயாளர் எஸ்.ஜி.சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :
புதிதாக ஒருவர் கட்சி தொடங்கியுள்ளார். நடிகர் விஜய் கட்சியை ஆரபித்து சந்தோஷமாக வரட்டும். கட்சியை துவங்கிய ஐந்து மாதத்தில் பக்ரீத், ரம்ஜான், ஈஸ்டர் என அனைத்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. என்ன காரணம் ?
ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூட சொல்ல திராணி இல்லாத தலைவர்களுக்கு நாம் ஏன் வாக்கு செலுத்த வேண்டும் என சித்திக்க வேண்டும்.. ஹிந்துவாக இருக்கும் யாரும் யாருக்கு வேண்டுமானாலும் வாக்கு செலுத்தலாம். ஆனால் மத பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்காமல் இழிவுப்படுத்துவோருக்கு வாக்கு செலுத்தக்கூடாது..
மற்ற மத பண்டிகைக்கு வாழ்த்து சொல்லும்போது ஹிந்துக்களின் வாக்கு வேண்டாமா என கேட்க வேண்டும்.. ஹிந்துக்கள் வாக்கு வேண்டுமென்றால் ஹிந்து பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்பதனை நாம் கட்டாயப்படுத்த வேண்டும்..
ஹிந்து மத பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாமல் இருக்கும் ஒருவருக்கு வாக்கு செலுத்த மாட்டோம் என போர்குணத்தோடு நாம் அனைவரும் இருந்தால் தான் நாளை நம் நாடும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசம் போல மாறாது என எஸ்.ஜி.சூர்யா தெரிவித்தார் .