இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென துருக்கி அதிபர் எர்டோகன் அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையிலான போர் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. மேற்கு கரை பகுதியில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற துருக்கி பெண்ணை இஸ்ரேல் ராணுவம் கொலை செய்தது மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், துருக்கி தலைநகர் இஸ்தான்புல் அருகே பள்ளி விழாவில் பங்கேற்ற அந்நாட்டு அதிபர் எர்டோகன், இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் அணிதிரள வேண்டும் என்றும், இதன் ஒருபகுதியாக எகிப்து, சிரியாவுடன் துருக்கி நட்பு பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் லெபனான் மற்றும் சிரியா நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாகவும் அவர் கூறினார். துருக்கி அதிபரின் இந்தக் கருத்துக்கு இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கட்ஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.