பாலியல் விவாகரத்தில் சிக்கும் நடிகர்களுக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-ம் ஆண்டு பொதுக்குழு தொடர்பாக நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையிலானோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மலையாளத் திரையுலகையே புரட்டிப் போட்ட பாலியல் புகார்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த நடிகர் சங்க நிர்வாகிகள், பாலியல் புகார் குறித்து நடிகர் சங்கத்துக்கு புகார் தெரிவிக்க ஹெல்ப் லைன் எண் மற்றும் இ-மெயில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இந்த குழு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் எனவும், சங்கத்தின் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படாது எனவும் அவர்கள் தெரிவித்தனர். பாலியல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்படும் நபருக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் எனவும் நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.