ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, 6-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது.
ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் வரும் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாக நடைபெறுகிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் 10 வேட்பாளர்கள் அடங்கிய 6-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. ஜம்முவின் முக்கிய தலைவராக கருதப்படும் ஆர்.எஸ். பதானியா உதம்பூர் கிழக்கு தொகுதியிலும், நசீர் அகமது லோனி பண்டிபோரா தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.