சேலத்தில் விஸ்வரூப செல்வ மகாலட்சுமி சிலையின் பாதத்தில் பக்தர்கள் 1008 சக்கரங்களை வைத்து வழிபாடு நடத்தினர்.
உலகிலேயே மிக உயரமான 135 அடி உயரம் கொண்ட விஸ்வரூப செல்வ மகாலட்சுமி சிலை அமைக்கும் பணிகள் ஏத்தாப்பூரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சிலையின் பாதத்தில் பல்வேறு பூஜை, அபிஷேகங்கள் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து 1008 சக்கரங்களை பக்தர்கள் மகாலட்சுமியின் பாதத்தில் வைத்து வழிபாடு செய்தனர். இதனையடுத்து விஸ்வரூப செல்வ மகாலட்சுமிக்கு 1008 மூலிகை திரவியங்களை கொண்டு ஹோமம், 108 தாமரை பூக்களால் மகாலட்சுமி யாகம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தங்கம், வெள்ளி காசுகள் போன்றவற்றை லட்சுமியின் பாதத்தில் வைத்து வழிபட்டனர்.