தேசிய கண்தான வாரத்தை ஒட்டி சென்னை, பெசன்ட் நகரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
குற்றவியல் புலன் விசாரணை துறையின் டிஐஜி பகலவன் தொடங்கி வைத்த இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய டி.ஐ.ஜி பகலவன் கண்தானத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து இளைஞர்கள் எந்தவித தயக்கமும் இன்றி கண்தானம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.