மும்பையில் லஞ்சம் வாங்கிய மத்திய சரக்கு, சேவை வரி கண்காணிப்பாளர் உள்ளிட்ட 3 பேர் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டனர்.
வரி ஏய்ப்பு செய்த நபருக்கு ஆதரவாக செயல்பட மத்திய சரக்கு, சேவை வரி கண்காணிப்பாளர் 60 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
இதையொட்டி, முதற்கட்டமாக 20 லட்ச ரூபாயை அவர் பெற்றபோது சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த மேலும் இருவர் சிக்கினர்.
விசாரணையில், ஏற்கெனவே ஹவாலா வாயிலாக மூவரும் 30 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியது தெரியவந்ததாக சிபிஐ தெரிவித்துள்ளது.