போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என அமைச்சர் காந்தியின் பேச்சு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் சீருடைகள் 100% 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கலந்துகொண்டு பேசினார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் தனியார் பள்ளிகளின் மீது பெற்றோர்களுக்கு இருந்த நம்பிக்கை குறைந்து அரசு பள்ளிகள் மீது நம்பிக்கை அதிகரித்து இருப்பதாக தெரிவித்தார்.
அரசு பள்ளிகளில் என்னென்ன அடிப்படை தேவைகள் தேவை என்பதை உணர்ந்து அரசு செய்வதாக தெரிவித்த அவர், பழைய கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டு அரசு பள்ளி கட்டிடங்கள் 5 ஸ்டார் ஹோட்டலுக்கு நிகராக அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு வருவதாக கூறினார்.
கடந்த பிறவியில் அதிக பாவம் செய்திருந்தால் அவர்களுக்கு ஆண் பிள்ளைகள் பிறக்கும் எனவும் அதிக புண்ணியம் செய்திருந்தால் பெண் பிள்ளைகள் பிறக்கும் என அவர் கூறினார். அமைச்சர் காந்தியின் பேச்சு பலத்த சர்ச்சை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.