மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காட்டில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சித்தர்காட்டில் மகாகவி சிலம்பம் அகாடமி சார்பில், இரண்டாவது ஆண்டாக மாநில அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது.
இதில் திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த 512 பேர் கலந்து கொண்டனர். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.