டெல்லி கேளிக்கை விடுதி ஒன்றில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீமாபுரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த விடுதியின் உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
சம்பவம் குறித்து உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.