இந்தியாவில் தஞ்சமைடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை மீண்டும் வங்கதேசம் அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையின் போது ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டன. இது தொடர்பாக, அப்போதைய பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவை மீண்டும் வங்கதேசம் அழைத்துவரும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அந்நாட்டில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.