ஜம்மு- காஷ்மீரில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த 2 பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
ஜம்மு- காஷ்மீரின் ரஜவுரி மாவட்டம், நவ்ஷேரா லாம் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, தங்களை நோக்கி தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு ராணுவம் பதிலடி கொடுத்தது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்கள் வைத்திருந்த இரண்டு ஏகே-47 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கி ஆகியவற்றை ராணுவ வீரர்கள் கைப்பற்றி, அப்பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்தினர்.