விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் இந்து முண்ணனி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி மணிநகரம், காந்தி மைதானம் , புளியம்பட்டி உள்ளிட்ட 12 இடங்களில், இந்து முண்ணணி சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.
இந்த சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெரிய கண்மாயில் கரைக்கப்பட்டன. முன்னதாக, ஏராளமான இளைஞர்கள் மேளதாளத்துடன் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்றனர்.