தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே சுற்றுலாப்பேருந்து மீது விளம்பரப் பதாகை விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பழைய பேருந்து நிலையம், பென்னாகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆங்காங்கே விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அவ்வழியாக சென்ற சுற்றுலா பேருந்து மீது சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பதாகை சரிந்து விழுந்தது. உடனடியாக சுதாரித்த ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.