இலங்கையில் பிரமாண்ட ஊர்வலத்துடன் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
இலங்கையின் கொட்டகலையில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் 9 தோட்டங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. அப்போது, மேளதாளங்களுடன் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், பக்தர்களின் பக்தி முழக்கத்துக்கு இடையே கிரேன் மூலம் விநாயகர் சிலைகள் குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
இதேபோல தலைநகர் கொழும்பில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் காக்கைத் தீவு முகத்துவார சங்கமத்தில் கரைக்கப்பட்டன.