சென்னை வேளச்சேரியில் அமெரிக்க துணைத் தூதரகம் சார்பில் பழங்காலப் பொருட்கள் கடத்தல் தடுப்பு பயிற்சி பட்டறை தொடங்கியது.
5 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சிப் பட்டறையில் இங்கிலாந்து, நெதர்லாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சிலைகளின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க துணை தூதரக அதிகாரி கிறிஸ் ஹோக்ஸ்,இரண்டு நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த கருத்தரங்கம் 5 நாள் நடைபெற உள்ளது. இது இரு நாட்டு உறவை மேம்படுத்த உதவும். இரு நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்கவும் உதவும். குறிப்பாக தமிழகத்தில் நடைபெறுவது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார்.
இந்தியா மற்றும் அமெரிக்க தொல்லியல் துறையினர் இணைந்து ஆயிரக்கணக்கான பண்டைய கால சிலைகளை அடையாளம் கண்டதாகவும், அதில் 300 சிலைகளை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.