தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆட்சேபம் தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் மத்திய அரசு நிதியுதவி மறுப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலையில், தமிழில் பயிற்றுவிக்கப்படுவதை தாங்கள் எதிர்க்கிறீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தமிழ் உள்பட இந்திய மொழிகளில் தேர்வுகள் நடத்தப்படுவதையும், பாடப்புத்தகங்கள் வடிவமைக்கப்படுவதையும் மு.க.ஸ்டாலின் எதிர்க்கிறாரா என தர்மேந்திர பிரதான் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையின் பன்முகத்தன்மை வாய்ந்த, சமத்துவ மற்றும் உள்ளார்ந்த கட்டமைப்பை மு.க.ஸ்டாலின் எதிர்க்கிறாரா என கேள்வி எழுப்பிய அவர்,அரசியல் ஆதாயத்தை ஓரம்கட்டிவிட்டு தமிழக மாணவர்களின் நலன் கருதி, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.