புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.
அப்போது, மருத்துவ காப்பீட்டு ஜிஎஸ்டி வரியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை ஆராய, பீகார் துணை முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும், அந்த குழு வழங்கும் பரிந்துரையின் அடிப்படையில் நவம்பர் மாதம் நடைபெறும் 55வது ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
மேலும், மத்திய, மாநில அரசால் நிறுவப்பட்ட பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் பெறும் நிதிக்கு ஜி.எஸ்.டி விலக்கு அளிக்க கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மேலும், ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் கிடைக்கும் வரி வருவாய் 412% உயர்ந்து 6,909 கோடி ரூபாயாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.