குற்றால அருவி அருகே மலைப்பாம்பு இருந்ததை கண்டு சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற குற்றால அருவியில் சீசன் காலம் முடிவடைந்த நிலையிலும், ஏராளமான சுற்றுலா பயணிகள் நீராடி வருகின்றனர்.
இந்நிலையில், மெயின் அருவியில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் சென்றபோது, நுழைவாயில் அருகே ராட்சத மலைப்பாம்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று, 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.