கோவை மாவட்டம் அன்னூர் அருகே அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் தரமற்ற குழாய்களை பயன்படுத்தியதால் ஒரே மாதத்தில் உடைப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அன்னூர் அருகே அல்லிக்குளம் ஊராட்சியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட அல்லி குளம் உள்ளது. இந்த குளத்தில் அண்மையில் அவிநாசி – அத்திகடவு திட்டம் மூலம் குழாய்கள் பதிக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டது.
திட்டம் நிறைவேற்றப்பட்டு குளத்திற்கு தண்ணீர் வர தொடங்கி ஒரு மாதத்திற்குள் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தரமற்ற குழாய்களை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.