கர்நாடக மாநிலம் மங்களூருவில், 14 வயது சிறுமி ஒருவர் தமது தாய் மீது கவிழ்ந்த ஆட்டோவை தனிஒருவராக தூக்கிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
கினிகோலி பகுதியில், சேத்னா என்பவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அதிவேகமாக சென்ற ஆட்டோ ஒன்று சேத்னா மீது மோதியது,
இதைக்கண்ட சேத்னாவின் 14 வயது மகள், அவர் மீது கவிழ்ந்து இருந்த ஆட்டோவை தனி ஒருவராக நின்று தூக்கினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.