பல வளர்ந்த நாடுகளின் பங்களிப்பை விடவும், இந்தியா 1.28 பில்லியன் அமெரிக்க டாலர்களை பருவநிலை நிதியத்துக்கு அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பிரிட்டனைத் தலைமையிடமான கொண்ட சிந்தனைக் குழு, Zurich Climate Resilience Alliance என்ற சூரிச் பருவநிலை மீட்பு சேர்ந்து காலநிலை நிதியம் பற்றிய பகுப்பாய்வுகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.
2022 ஆம் ஆண்டில் நார்வே, பிரான்ஸ், லக்சம்பர்க், ஜெர்மனி, சுவீடன், டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஜப்பான், நெதர்லாந்து, ஆஸ்திரியா, பெல்ஜியம் மற்றும் பின்லாந்து ஆகிய 12 வளர்ந்த நாடுகள் மட்டுமே சர்வதேச காலநிலை நிதியில் நியாயமான பங்கை வழங்கியுள்ளன என்று இந்த அறிக்கை வெளிப்படுத்தியிருக்கிறது.
பருவநிலை நிதியில் குறிப்பிடத்தக்க இடைவெளி வருவதற்கான காரணம், அமெரிக்கா தனது நியாயமான பங்களிப்பை வழங்காமல் இருப்பதாகும் என்றும் இந்த குழுவின் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும்,ஆஸ்திரேலியா, ஸ்பெயின், கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளும் காலநிலை நிதி விஷயத்தில் குறைவாகவே செயல்பட்டுள்ளன என்றும் தெரிய வந்துள்ளது.
அபிவிருத்தி வங்கிகள் மற்றும் காலநிலை நிதிகளுக்கான பலதரப்பு பங்களிப்புகள் மூலம் வளரும் நாடுகளுக்கு கணிசமான காலநிலை நிதியை வழங்கிய முதல் முப்பது இரண்டாம் நிலை நாடுகளையும் இந்த ஆய்வறிக்கை அடையாளம் காட்டியுள்ளது.
இந்த பட்டியலில்,முன்னாள் பொருளாதார நாடுகளான போலந்து மற்றும் ரஷ்யா,உட்பட 1992 ஆம் ஆண்டு முதல் உயர் வருமான அந்தஸ்தை அடைந்த நாடுகளான, சிலி, குவைத், சவுதி அரேபியா மற்றும் தென் கொரியால பிரேசில் மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட நடுத்தர வருமான நாடுகளான சீனா, இந்தியா உட்பட இந்தோனேசியா, மெக்சிகோ, நைஜீரியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன.
பலதரப்பு மேம்பாட்டு வங்கிகள் (MDBs) மூலம் பிற வளரும் நாடுகளுக்கு காலநிலை நிதியாக இந்தியா 1.287 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது.
இது கிரீஸ், போர்ச்சுகல், அயர்லாந்து, நியூசிலாந்து மற்றும் சில வளர்ந்த நாடுகளின் பங்களிப்பைக் காட்டிலும் மிகப் பெரிய பெரிய தொகையாகும். அதே நேரத்தில் சீனா 2.52 பில்லியன் அமெரிக்க டாலர்களை காலநிலை நிதியாக வழங்கியுள்ளது.
2009ம் ஆண்டு கோபன்ஹேகனில் நடந்த COP15 மாநாட்டில், வளரும் நாடுகளுக்கு பருவநிலை மாற்றத்தைத் தடுக்க உதவும் வகையில் 2020ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்த வளர்ந்த நாடுகள் கூட்டாக வழங்குவதாக உறுதியளித்திருந்தன.
இருப்பினும், இந்த இலக்கு முழுமையாக எட்டப்படாமல், குறிப்பிடத்தக்க நிதி இடைவெளிக்கு வழிவகுத்துள்ளது என்றும், இந்த பற்றாக்குறை வளரும் நாடுகளில் நம்பிக்கையைச் சிதைத்து, காலநிலை தடுப்பு நடவடிக்கைகளுக்கு தடையாக உள்ளது என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
வளரும் நாடுகளில் காலநிலை நடவடிக்கையை ஆதரிப்பதற்காக, 2025ம் ஆண்டு முதல், வளர்ந்த நாடுகள் ஆண்டுதோறும் திரட்ட வேண்டிய தொகையைக் குறிக்கும் புதிய கூட்டு அளவுகோல் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் நவம்பரில் அஜர்பைஜானின் பாகுவில் நடைபெறும் இந்த ஆண்டுக்கான ஐநா காலநிலை மாநாட்டில் இந்த அளவுகோல் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2050ம் ஆண்டுக்கு முன்பே பணக்கார நாடுகள் தங்கள் கார்பன் கால்தடத்தை முற்றிலுமாக குறைக்க வேண்டும் என்றும், 2025க்குப் பிந்தைய உலகளாவிய பருவநிலை நிதி இலக்கான புதிய கூட்டு அளவுகோலில் உறுதியான மற்றும் உண்மையான முன்னேற்றத்தை இந்தியா எதிர்பார்க்கிறது என்றும் பிரதமர் மோடி ஏற்கெனவே அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.