சென்னையில் நடிகர் விஜய்யின் பாட்டை கேட்டு தன்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்திய பெருமூலைவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன், அவரது வீட்டின் முன்பு காத்திருந்தும் விஜய் சந்திக்காமல் சென்ற நிகழ்வு விம்ரசனங்களை ஏற்படுத்தியுள்ளது.
கோட் திரைபடத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம் பகுதியில் நடந்தபோது, பெருமூலைவாதம் பாதிக்கப்பட சிறுவன் ரிஷான், நடிகர் விஜய்யை சந்தித்துள்ளார்.
அதன்பிறகு, சிறுவனின் மூளை வளர்ச்சியில் முன்னேற்றம் உள்ளதாக எண்ணிய பெற்றோர், நடிகர் விஜய்யை சந்திக்க, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.
வீட்டின் முன்பு 6 மணி நேரமாக காத்திருந்த நிலையில், திடீரென வந்த விஜய்யின் காரை பார்த்ததும், சிறுவன் ரிஷான் துள்ளி குதித்து ஓட முயன்றுள்ளார்.
ஆனால், விஜய் வந்த கார் நிற்காமல் வீட்டிற்குள் சென்றதால், சிறுவன் மற்றும் அவரது பெற்றோர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். விஜய்யின் பாடலை கேட்டு சிறுவன் ரிஷான் சேரில் இருந்து எழுந்து ஆடத் துடிப்பது பார்ப்போர் கண்களை கலங்க செய்தது.