தமிழகத்தில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தியை தொடங்குவது குறித்து அந்நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்க சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டார்.
அந்த வகையில் தமிழகத்தில் மீண்டும் போர்டு கார் நிறுவனத்தின் உற்பத்தி தொடங்குவது குறித்து ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவன குழுவுடன் ஆலோசானை நடத்தியதாக தமது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.