தேனி மாவட்டம் உப்புக்கோட்டை கிராமத்தில் பணத்திற்காக விற்பனை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தையை தனிப்படை போலீசார் மீட்டனர்.
உப்புக்கோட்டை கிராமத்தை சேர்ந்த சங்கருக்கும், பரமேஸ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது சங்கரை அணுகிய கும்பல் குழந்தையை கொடுத்தால் பணம் தருவதாக கூறியுள்ளனர். இ
தனால் பச்சிளம் குழந்தையை தாய்க்கு தெரியாமல் 88 ஆயிரம் ரூபாய்க்கு சங்கர் விற்பனை செய்துள்ளார். இதுதொடர்பாக புகார் எழுந்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் தந்தையிடம் விசாரணை நடத்தினர். அப்போது, சங்கர் கொடுத்த விவரங்களின் அடிப்படையில் போடிநாயக்கனூரில் பச்சிளம் குழந்தையை தனிப்படை போலீசார் மீட்டனர்.