பெயரில் மதவாதம் வைத்துள்ள கட்சியுடன் தான் திருமாவளவன் கூட்டணி வைத்துள்ளதாக தமிழக பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே பாஜக உறுப்பினர் சேர்க்கையை அக்கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெல்லையில் போட்டியிட்ட போது சாதியின் பெயராலும், மதவாதத்தின் பெயராலும் விசிக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக கூறினார்.
மதவாத கட்சி என்பது பாஜக இல்லை எனவும் அவர் தெரிவித்தார். மேலும், கல்விதுறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தால், தமிழக அரசு இந்தியை சேர்த்துவிடுமா கேள்வி எழுப்பினார்.