குற்றால அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தபோது கொடிய விஷப்பாம்பு ஒன்று விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குற்றால அருவிகளில் நீர்வரத்து சீராக இருந்ததால் சுற்றுலாப்பயணிகள் இரண்டு நாட்கள் தடைக்கு பின் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தபோது கொடிய விஷமுடைய கட்டு விரியன் பாம்பு ஒன்று தண்ணீருடன் சேர்ந்து வந்தது.
இதையறிந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். தகவலறிந்து சென்றதீயணைப்புத்துறையினர் பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.