உத்தரப்பிரதேசத்தில் ஓநாய் தாக்கியதில் மேலும் 2 பெண்கள் படுகாயமடைந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், பஹ்ரைச் கிராமத்தில் சுற்றித்திரியும் ஓநாய்கள் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். வனப்பகுதியில் வெளியேறி ஊருக்குள் நடமாடிய 6 ஓநாய்களில் 5 பிடிப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ஒரு ஒநாயை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள மஹாசி கிராமத்தில் ஓநாய் தாக்கியதில் மேலும் 2 பெண்கள் படுடுகாயமடைந்தனர். இருவரும் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஊருக்குள் நடமாடும் ஓநாயை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இரவு குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்தபோது வீட்டில் மறைந்திருந்த ஓநாய் தாக்கியதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்தார்.
வீட்டின் வெளியே அமர்ந்திருந்தபோது ஓநாய் வந்த கழுத்தை பிடித்ததாக மற்றொரு பெண் கூறியுள்ளார். பஹ்ரைச் பகுதியில் நடமாடும் ஆட்கொல்லி ஓநாய்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.