ஆந்திராவில் கார் மீது லாரி மோதிய விபத்தில் காரில் பயணித்த நான்கு பேர் உயிரிழந்தனர்.
சித்தூர் மாவட்டம் கலக்கடாவில் இருந்து தக்காளி லாரி ஒன்று சென்னைக்கு சென்று கொண்டிருந்தது. சந்திரகிரி – திருப்பதி இடையே உள்ள பாக்ராபேட்டை மலை பாதையில் லாரி சென்று போது, கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், காரில் பயணம் செய்த நான்கு பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். லாரியின் அடியில் சிக்கிக் கொண்ட ஒருவரை அப்பகுதி மக்கள் போராடி காப்பாற்றினர்.