ஹரியானா சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக- பிரதமர் மோடி உள்ளிட்ட 40 பேர் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது.
90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா சட்டப் பேரவைக்கு அக்டோபர் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 12ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் பிரச்சாரம் செய்வோரின் விஜபி பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, சிவராஜ் சிங் சௌஹான், பியூஷ் கோயல், ஹிமந்தா பிஸ்வா சர்மா, புஷ்கர் சிங் தாமி மற்றும் பபிதா போகத் ஆகியோரும் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.