கன்னியாகுமரி தனியார் கல்லூரி ஒன்றில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இலவுவிளை பகுதியில் செயல்பட்டு வரும் மார் எப்ரேம் பொறியியல் கல்லூரியில் மாணவ மாணவிகள் மாவேலி வேடமணிந்து மேள தாளங்கள் முழங்க ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.
இந்த கொண்டாட்டத்தில் திருவாதிரை நடனம், வடம் இழுத்தல், பானை உடைத்தல் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன.