சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் பாத முனியப்பன் கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
சேலம், உத்தமசோழபுரம், சூளைமேட்டில் உள்ள பாத முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று காலையில் யாகசாலை பூஜைகள் துவங்கின.
முன்னதாக உத்தமசோழபுரம் கைலாசநாதர் கோயிலில் இருந்து புனித தீர்த்த குடங்கள், புதிய கலசங்கள், முளைப்பாரி ஆகியவற்றை ஊர்வலமாக பெண்கள் எடுத்து சென்றனர்.
பசுமாடுகள், காளைகள் அணிவகுக்க மேளதாளம் முழங்க நடந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மதியம் அன்னதானமும் அதனைத் தொடர்ந்து வாஸ்து ஹோம பூஜைகள், கும்ப அலங்காரம், மண்டபார்ச்சனை நடைபெற்றது.