விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாடு ஒரு நாடகம் என பாஜக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னை சோழிங்கநல்லூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :
“விசிகவின் மதுஒழிப்பு மாநாடு ஒரு நாடகம். பாமக கட்சி தொடங்கிய நாளிலிருந்து மதுவை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இது பாமகவின் கொள்கை திடீரென்று விசிகவிற்கு ஞான உபதேசம் வந்துள்ளது. விசிகவினர் யாரும் மது அருந்தகூடாது என தீர்மானம் நிறைவேற்றட்டும்.
திமுக கூட்டணியில் திருமாவளவனுக்கு மரியாதை இல்லை. மகாவிஷ்ணு விவகாரத்தில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதுதான் வழக்கு பதிவு செய்யவேண்டும்.
இந்துக்களை கொச்சைப்படுத்தி பேசும் ஆ.ராசா, உதயநிதி மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை. காவல்துறையினர் திமுகவுக்காக வேலை செய்து வருகின்றனர்” என அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்தார்.