அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர் பெயரை ‘ஸ்ரீ விஜய புரம்’ என மாற்றுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சியின்போது கிழக்கிந்திய கம்பெனி கடற்படை அதிகாரி ஆர்க்கிபால்ட் பிளேயரின் மறைவுக்குப் பின்னர், அவரது நினைவாக அந்தமான் தலைநகருக்கு போர்ட் பிளேர் என பெயர் சூட்டப்பட்டது.
இதை ‘ஸ்ரீ விஜய புரம்’ என மாற்றி மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடியின் இலக்குப்படி, காலனியாதிக்க மனோபாவத்திலிருந்து தேசத்தை முழுவதுமாக விடுவிக்கும் வகையில், போர்ட் பிளேர் பெயரை ‘ஸ்ரீ விஜய புரம்’ என மாற்ற முடிவு எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.