கும்பகோணம் அருகே நாதன்கோவில் ஜெகநாதப்பெருமாள் கோயிலில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சாமி தரிசனம் செய்தார்.
தஞ்சாவூரிலிருந்து, விக்கிரவாண்டி வரை அமைக்கப்படும் நான்கு வழிச்சாலை பணிகளை பார்வையிட, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஹெலிகாப்டர் மூலம் கும்பகோணம் வந்தடைந்தார்.
அவரை தஞ்சை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் 108 வைணவ தலங்களில் ஒன்றான நாதன்கோவில் ஜெகநாதப்பெருமாள் கோயிலில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.