இந்தியாவுக்கு அதிநவீன ஏவுகணையை விற்க அமெரிக்க அரசு முடிவுசெய்துள்ளது.
நீர்மூழ்கிக்கப்பல்களை தாக்கக்கூடிய சோனாபாய்ஸ் எனப்படும் அதிநவீன ஏவுகணை அமெரிக்காவில் பயன்பாட்டில் இருக்கும் நிலையில் இத்தகைய ஏவுகணை 52.8 மில்லியன் டாலர் மதிப்புடையது.
இந்த ஏவுகணை இந்தியாவுக்கு விற்கப்படுவதால் தெற்கு ஆசிய பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, அரசியல் ஸ்திரத்தன்மை வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என பெண்டகன் ராணுவத் தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து 30 நாட்களுக்குள் பரிசீலித்து பதிலளிக்கப்படும் என அமெரிக்க நாடாளுமன்றம் தெரிவித்திருக்கிறது.