ஜம்மு-காஷ்மீரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து அக்டோபர் 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். தோடா மாவட்டத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு ஆதரவு திரட்டுகிறார்.
சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தோடாவுக்கு பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமரின் வருகையை முன்னிட்டு தோடாவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.