தமிழக வக்பு வாரியத் தலைவர் அப்துல் ரகுமான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த அப்துல் ரகுமான், கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் வக்பு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டர்.
அவர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்த நிலையில், அப்துல் ரகுமான் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்துல் ரகுமானின் ராஜினாமாவை ஏற்பதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், வக்பு வாரியத்திற்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.