சீனாவில் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த 75 ஆண்டுகளாக ஆண்களுக்கான ஒய்வு பெறும் வயது 60ஆகவும், பெண்களுக்கு உடலுழைப்பு பணிகளுக்கு 50 ஆகவும், மற்ற பணிகளுக்கு 55 ஆகவும் இருந்து வந்தது.
இந்நிலையில் ஓய்வு வயதை உயர்த்த சீன அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில், ஆண்களுக்கான ஓய்வு பெறும் வயது 63ஆகவும், பெண்களுக்கான ஓய்வு பெறும் வயது 58 ஆகவும், அதிக உடலுழைப்பு தொழில்களில் ஈடுபடும் பெண்களுக்கு 55-ஆகவும் அதிகரிக்கப்பட உள்ளது.