தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஆலடிப்பட்டி ஸ்ரீவைத்தியலிங்க சுவாமி கோயில் ஆவணித் திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த 4 ம் தேதி கொயேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இந்நிலையில், சிகர நிகழ்ச்சியாக பத்தாவது நாள் திருவிழாவையொட்டி திருத்தேரோட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவைத்தியலிங்க சுவாமி தேரை ஆண்களும், ஸ்ரீயோகாம்பிகை அம்பாள் தேரை பெண்களும் பக்தி கோஷங்களுடன் வடம் பிடித்து இழுத்தனர். இதில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.