நெல்லையில் கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசி மது அருந்த அழைத்த பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டை தனியார் கல்லூரியில் பேராசிரியர்களாக ஜெபஸ்டின், பால்ராஜ் ஆகியோர் பணியாற்றி வந்தனர். கடந்த 4ஆம் தேதி இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது தனது வகுப்பில் படிக்கும் கல்லூரி மாணவி ஒருவரை செல்போனில் தொடர்புகொண்ட ஜெபஸ்டின் ஆபாசமாக பேசியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து மாணவியிடம் பேசிய பால்ராஜ், மது அருந்த அழைத்துள்ளார். இந்த விவகாரம் உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்ததையடுத்து ஜெபஸ்டினை போலீசார் கைது செய்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள பால்ராஜை தேடி வருகின்றனர். இந்நிலையில் மாணவியிடம் அத்துமீறிய இரு பேராசிரியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.