குரூப் 4 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி தலைவர் எஸ்.கே பிரபாகர் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் பிரசிடென்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு மையத்தை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.
தேர்வுக்கும், தேர்வு முடிவுக்கும் உள்ள காலதூரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த ஆண்டு திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளும் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறினார். இந்த தேர்வுக்கான விடை குறிப்பு இன்னும் ஆறு வேலை நாட்களில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு சுமார் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் தேர்வுகள் நடைபெறும் என்றும், “குரூப் 4 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக பிரபாகர் தெரிவித்தார்.