தொடர் விடுமுறை மற்றும் சுப முகூர்த்த தினத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் விடுமுறை என்பதாலும், சுப முகூர்த்த தினம் என்பதாலும் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்த நிலையில் கோவில் வளாகம் திருவிழாக்கோலம் பூண்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் திருச்செந்தூர் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.