நாமக்கல் பலபட்டரை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவையொட்டி, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் நடைபெற்றது.யாகசாலை பூஜையை அடுத்து, தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, முதலில் கோபுரத்திற்கும், பின்னர், விநாயகர் மற்றும் மூலவருக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. . விழாவில், தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.